ஒரு பைத்தியக்காரனின் டைரிக் குறிப்புகள்

ஒரு பைத்தியக்காரனின் டைரிக் குறிப்புகள்

120 pages2019நாடோடி பதிப்பகம்
150

Available at:

SHARE

About the Book

புத்தகனுபவம்......
என் முதல் புத்தகத்தை கோவை விஜயா பதிப்பக குழுவினர் அச்சிட்டு தந்தனர். அதை இரண்டு முறை சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர் புவியரசு அவர்கள் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தை சிலர், முதலில் இருக்கும் பிழையாய் எழுதப்பட்ட 'தமிழென்று சங்கே முழங்கு' மரபுக் கவிதைக்காகவே வாங்கிப் போனார்கள். சிலர், என்னோடு பழகிய தோசத்திற்காக வாங்கிப் போனார்கள். இன்னும் சிலர், இலவசமாக மொத்தம் 30,000/போட்டு வெளியிடப்பட்ட அந்த அன்புடையவளுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் நூலால் வந்த வரவு 10,000 வருத்தமில்லை. ஆனாலும் இன்னும் அந்த புத்தகத்தில் 250 பிரதிகள் கேட்பாரற்று கிடப்பது தான் பெரும் வருத்தமாயிருக்கிறது.
இந்தப் புத்தகத்தை வாசித்து விட்டு என் கல்லூரியில் லேப் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றும் திரு...... அவர்கள் என்னை பார்த்து 'தம்பி நீங்க எஸ்.சி' யா என கேட்டார். ஏனென்றால் அவர் தாழ்த்தப்பட்டிருக்கிறார். தாக்கப்பட்டிருக்கிறார். அந்த காயங்களுக்கு ஆறுதலாக ஏதோ ஒரு கவிதையில் ஏதோ ஒரு வரியை அடையாளம் கண்டிருக்கிறார்.
'இல்ல ண்ணா. ஏன்?'
'இல்ல தம்பி உங்க கவிதை ல சாதிய வெறுப்பு நிறைய தெரிஞ்சது அதான்'
'பார்த்து நொந்து கிட்டது ண்ணா. எங்க ஊர் பக்கம் நெறைய அழிச்சாட்டியங்கள் நடக்கும்'
'நல்லா இருந்துச்சு தம்பி. நெறய எழுது' என்று சொல்லி 'நானும் எழுதுவேன் தம்பி' என இளமை காலத்தில் தன் காதலிக்கு எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் சில கவிதைகளையும் எடுத்து வாசித்து காட்டினார். பிறகு என் புத்தகத்தைப் பற்றி ஒரு வாழ்த்து கடிதத்தை எடுத்துக் கொடுத்தார் அப்போது அவர் முகத்தில் இருந்த மகிழ்ச்சியே என் முதல் புத்தகத்தின் முதல் மற்றும் பெரும் வெற்றி.
முதல் கோணலே முற்றிலும் கோணலான போதும் ஓய்ந்து விடாமல் அடுத்த வருசமே "சிப்பிக்குள் சிந்தா மழை" என்று இன்னொரு கவிதை தொகுப்பை கோவை கரங்களில் அச்சிட்டேன். இதையும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் என் கல்லூரி விழா ஒன்றில் வெளியிட்டார். இப்போது வெறும் நூறு பிரதிகள் தான். அவ்வளவும் விற்றும் தந்தும் தீர்ந்து விட்டன. நல்ல வரவேற்பு. என்ன அங்கங்கு அச்சுப் பிழைகள் தாம்.
இந்த புத்தகத்தின் பின் புறத்தில் இருக்கும்
'உன்னை நான் புரட்ட என்னை நீ புரட்ட நம்மாலொரு புரட்சி நடக்கட்டும்'
என்ற வரிகளை வாசித்து விட்டு விமர்சிக்காத அல்லது பாராட்டாத ஆட்கள் யாரும் இருக்க முடியாது. நூலை வெளியிட்டு விட்டு பிரதிகளை என் கல்லூரி பேராசிரியர்களுக்கு கொடுக்க போயிருந்தேன். அப்போது என் புத்தகத்தின் பின் பக்கத்தைப் பார்த்த மின்னியல் துறை பேராசிரியர் திருமதி... அவர்கள் 'இந்த வரிகள உன் புத்தக்தது ல மட்டும் இல்ல. எல்லா புத்தகத்துலயும் போடலாம்.னு சொன்னதும் உச்சியிலிருந்து பாதம் வரைக்கும் அமுதாபிஷேகம் செய்ததைப் போல குளிர்ச்சியாக இருந்தது.
மற்றும் என் புத்தகத்தின் உள்ளிருக்கும் கஞ்சா என்ற கவிதையை வாசித்து விட்டு இயந்திரவியல் துறை உதவிப் பேராசிரியர் திரு.. அவர்கள் 'கஞ்சா குடிப்பியா? அவ்வளவு உணர்வு பூர்வமா எழுதி இருக்க. இதுல பின் குறிப்பு வேற நான் கஞ்சா குடிப்பவனும் இல்லை. குடித்ததும் இல்லை னு' என கேட்டார்.
'குடிச்சதில்ல சார்'
'ம் குடிக்காம இருந்தா சரி தான். பார்த்து யா.. ஒழுக்கமா இரு' என எச்சரித்தும் பின்பு வாழ்த்தி கை குலுக்கியும் அனுப்பி வைத்தார்.
இதற்குள் என் சகாக்கள் புத்தக ஸ்டால் போட்டிருந்த இடத்தில் ஒரு பெருங் கூத்தை நிகழ்த்தி விட்டார்கள்.
அந்த வழியாக போன ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்து புத்தகம் வாங்கச் சொல்லி இருக்கிறார்கள். அவள் புத்தகத்தை வெறித்த படி நின்றாளாம். இவன்கள் புத்தகத்தைத் திருப்பி போட்டு
'இத படி மா நிச்சயம் நீ புத்தகம் வாங்குவ' எனச் சொல்ல வாசித்து விட்டு போனவள் போனவள் தானாம் பிறகு அந்த வழியாய் அவள் வரவே இல்லையாம்.
இப்படியாக, இப்போது மூன்றாம் புத்தகம்.
'அப்படியா அந்த புத்தகத்தின் பெயர் என்ன?'
என்று கேட்டு வைத்து விடாதீர்கள். அதை தான் இவ்வளவு நேரம் வாசித்து கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து வாசியுங்கள்.
நன்றியுடன்
ர. அஜித்குமார்

You May Also Like