
முற்றிய பிரியத்தின் வற்றாத துளி
SHARE
About the Book
காதலும் கவிதையும்
காதல், கவிதை இரண்டுமே உலகின் அதி அற்புதமான, அழகான விசயங்கள். இவை, ஒன்றுக்கொன்று நெருங்கியத் தொடர்புடைய புரட்சியின் இரு வடிவங்கள். மேலும், காதலை விடுத்து கவிதை இயங்கும்; ஆனால் கவிதையை விடுத்து காதல் இயங்குமா, இருக்குமா என்றால் சந்தேகம் தான். ஏனெனில், காதல் என்பதே கவித்துவமான ஓர் உணர்ச்சி. அப்படியான ஓர் உணர்ச்சியின் வெளிப்பாடே இந்தக் கவிதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையிலும் எதிர்ப்பார்ப்பே இல்லாத ஒரு அன்பிற்கான எதிர்ப்பார்ப்பை, ஏக்கத்தை உங்களால் உணர முடியும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
இப்போது, இந்தப் புத்தகம் முழுக்க முழுக்கக் காதலைப் பற்றியது என்று தெளிவுற தெரிந்திருக்கும். ஆக, இனி இந்தப் புத்தகத்தை வாசிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்து, ஒருவேளை வாசித்தால் சொல்லுமாறு கொள்கிறேன். உங்களின் மேலான கருத்துகளைச் நன்றியுடனும் காதலுடனும் கேட்டுக்
என்றும் வற்றாத காதலுடன்
ர.அஜித்குமார் (9944154823)
ajith24ram@gmail.com